Showing posts with label மார்கழிப் பனி. Show all posts
Showing posts with label மார்கழிப் பனி. Show all posts

Monday, 9 June 2014

என்னவள்

என்னவள் 

இருள் நீங்கும் முன்
ஒரு உதயம்
என்னவள் விழித்து விட்டாள்....!!!

அன்னப் பறவை
அன்னார்ந்துப் பார்த்தது
என்னவள் எழுந்து நடக்கிறாள்....!!!

மார்கழிப் பனியில்
நனையும் மஞ்சள் நிலா
என்னவள் கோலமிடுகிறாள்....!!!

தாமரை குளத்தில்
மல்லிகை வாசம்
என்னவள் குளித்து முடித்திருக்கிறாள்....!!!

சித்திரை வெயில் சாரல் மழை
ஒ என்னால் கூந்தல் உலர்த்துகிறாள்....!!!


தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!