Tuesday, 10 June 2014

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை
என்று  

தற்கொலை செய்து கொண்டது
என் காதல் கடிதம் .....!!!

என்னை பிடித்து இருக்கா ??

உனக்கு பிடிக்காத அனைத்தயும் வெறுக்கிறேன் 
என்னையும் சேர்த்து....!!!

என்னை  பிடித்து  இருக்கா  ??

நாத்திகம்

அன்பே நாத்திகனையும் 
ஆத்திகனாக்கி விட்டாய்...........???


கோவில் வாசலை கூட மிதிக்காத எனது கால்கள்...!!!
கோவிலுக்குள்ளயே சென்றது....!!!

அன்பே உன் கையால் செய்த
சர்க்கரை பொங்கலுக்காக.....!!!



காதலின் நினைவு

இதுவரை
உன்னைப்போல் யாரும் என்னை 
காயம் செய்யவும் இல்லை
காதல் கொள்ளவும் இல்லை
அதனால் தான் இன்னும் கூட
உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்....!!!



காதலின் நினைவு 

என் கனவு

என் கனவு 


விடியும் வரை காத்திருந்தேன் கனவில் 

நீ வருவாய் என்று 

ஆனால் 

மறந்துவிட்டேன் 

உறங்க …...? 

உன்  நினைவால் .......!!!




ரணம்

ரணம் 

ரோஜாவை பறிக்கும் போது
குத்திய முள்ளின் ரணம் ....!!!



அவள் வாங்க மறுத்த
போது தான் வலித்தது....????

இதயக்கோவில்

இதயக்கோவில் 

என்னிடம் 
அழகு இல்லை 
மற்றவர் 
என்னை ரசிக்க …!!!

ஆனால் 
அழகான 
இதயம் உண்டு மற்றவர் 
அதில் வசிக்க …!!!



சுவசக்கற்றே

சுவாசிக்க காற்றே இல்லை என்றாலும் …
நான் உயிர் வாழ்வேன் …..??

நேசிக்க நீ இருக்கும் வரை ….!!



ராஜாவின் ரோஜா

நான் ரோஜாவை போல 
அழகாணவன் இல்லை 
ஆனால் 


என் 
இதயம் ரோஜாவை விட 
அழகானது,,,,,,,,,,!!!



அன்பு

கண்ணீர் கூட சுகமானது
துடைக்க நீ இருந்ததால்

உன் அன்பால்......!!!

Monday, 9 June 2014

என் தேவதை எங்கே

இரவா பகலா தெரியாதிருந்தேன்
இமையெங்கும் தேவியே

 உன் கனவை சுமந்தேன்
சரியோ தவறோ மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும் 

உனை நான் மறவேன்
நீ எந்த கோவில் தேவதை

கேள் எந்தன் நெஞ்சின் பாடலை.

சிலேடை 

சந்தனமும் பெண்ணும் 



மணப்பதால்,
மாலையிடுவதால்
மஞ்சத்தில் அல்லது கட்டிலில் பயன்படுவதால்
கட்டையெனப் படுவதால் – சமயத்தில்
கடத்தப் படுவதால்
தரம் பல உள்ளதால்
அனுமதியில்லாமல் ‘வைத்திருப்பது’
சட்டப்படி குற்றம் என்பதால்
உரசினால் மட்டுமே பலன் பெற முடியும் என்பதால்
உயர் சந்தனமும் பெண்ணும் ஒப்பென்றுணர்!

கண்டம்

என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை
உன்னை பார்க்கும் வரை…!!!

என்னவள்

என்னவள் 

இருள் நீங்கும் முன்
ஒரு உதயம்
என்னவள் விழித்து விட்டாள்....!!!

அன்னப் பறவை
அன்னார்ந்துப் பார்த்தது
என்னவள் எழுந்து நடக்கிறாள்....!!!

மார்கழிப் பனியில்
நனையும் மஞ்சள் நிலா
என்னவள் கோலமிடுகிறாள்....!!!

தாமரை குளத்தில்
மல்லிகை வாசம்
என்னவள் குளித்து முடித்திருக்கிறாள்....!!!

சித்திரை வெயில் சாரல் மழை
ஒ என்னால் கூந்தல் உலர்த்துகிறாள்....!!!


வாழ்கை

வாழ்கை ஒரு காகிதம் போன்றது அதில்
கவிதை எழுதவதும்
கசக்கி எறிவதும் உன் கையில் உள்ளது ....!!!

நினைவலைகள்

என் இதையம் கூட
எனக்கு துரோகம் செய்கிறது..! 
என்னிடம் இருந்துகொண்டு
உன்னைப்பற்றியே
நினைத்து கொண்டிருக்கிறது..! 

தாஜ்மஹால்

இந்த உலகம்
தாஜ்மஹால் ஆகும்வரை, 
இந்த கல்லறை
ஒரு உலக அதிசயம்..! 

தாஜ்மஹால்

கோபம்


கோபம் 


உன் கோபம் உன்னை
நேசிப்பவர்களை வெறுக்க வைக்கும்..! 
ஆனால்
உன் அன்பு உன்னை
வெறுப்பவர்களை நேசிக்க வைக்கும்..! 

உண்மைக்காதல்

நீ பார்க்கும் போது புன்னகை செய்யும் உதடுகளை விட,
நீ பார்க்காத போது கண்ணீர் சிந்தும் கண்களை நேசி,
அதுதான் உண்மையான அன்பு.

நிலவு

நச்சத்திரம் இல்லாத வானத்த்தில்

நிலவு 
என்

இதயத்தில் என்னவள்......!!!

போதுமே

Sorry என்ற வார்த்தை வேண்டாம் 
உந்தன் கண்ணின் மொழி போதும்.
Thanks என்ற வார்த்தை வேண்டாம் 
உன் சிரிப்பு போதும்




நிழலா நிஜமா

உன்னை காணும் என் கண்களுக்கு கூட தெரியவில்லை.....???

உன்னை காண்பது கணவா
இல்லை நினைவா என்று ???
ஏன் என்றால் என்றும் நீ 
என் கண்முன்னே இருப்பதால் !



காதல்

காதல் 

இருந்தால் இனிக்கும்,
இல்லை என்றால் கசக்கும்.
இது இல்லை என்றால்,
வாழ்க்கை ஒப்புக்கு சப்பை........!!!!

முதல் சந்திப்பு

 முதல் சந்திப்பு 


பார்த்த முதல் நாள் நினைவில் இல்லை.
பார்த்த நாள் முதல் நினைவே இல்லை.

எட்டாவது அதிசயம்

உலக அதிசயம் ஏழு ,
ஆனால் உன்னை பார்த்த பின்புதான் தெரிந்தது,
அது எட்டு என்று.

எட்டாவது அதிசயம்/ எட்டாத அதிசயம் 

ஆட்டம் ஓட்டம்

என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி
தினமும் ஊஞ்சல் ஆடுபவளே,
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை,
நின்று விடும் ஏன் இரத்த ஓட்டம்.

Friday, 6 June 2014

விழி ஈர்ர்ப்பு விசை ...??

புவி ஈர்ப்பு விசையை விட
வலிமையனதோ 
உனது 

விழி ஈர்ர்ப்பு விசை ...??


அணைப்பாயா அன்பே

நீ பார்த்த பார்வையில்
பற்றி கொண்ட தீ குச்சி நான்,
எறிந்து கொன்டே இருப்பேன்
திரும்பி வந்து
நீ அணைக்கும் வரை

பிஞ்சு பாதங்கள்

காலையில் அவள் போட்ட கோலத்தை விட
அழகாக இருந்தது...

அதை சுற்றி
இருந்த அவளின்
பாத சுவடுகள்..!



கொலுசொலி

கோடை கால வெயிலில்,
உன் கொலுசு தான் என்னை குளிர வைக்கிறது,
நீ நடந்து செல்லும் போது ..
ஜில் ஜில் ...
என்று ....

ஜில் ஜில்  கொலுசோசை 

கண்ணீர் கவிதை

கண்கள் கூட 
கவிதை பேசும் 
உன்னைப்பார்க்கும்போது

ஆனால்அந்தக்கவிதை
கூட கண்ணிர் சிந்தும் உன்னை
பிரியும் போது...

காதல் கோவில்

காதல் இன்றி வாழ்ந்தால்
கோவிலும் கல்லறை தான்
காதலி ஒருத்தி தூங்குவதால்
ஒரு கல்லறையும் கோவில் தான் ….!


தாஜ்மஹால் 




வெட்கம்

மலர்ந்தது என் முகம் மழயை கண்டு.
துடித்தது என் மனம் நனைவேன் என்று..
கரைந்தது என் தினம் நொடியில் அன்று...

உயிரில் கலந்தது

கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்,
என் உயிரோடு
நீ கலந்திருந்தால்
உன்னை பிரிவதே
எப்படி??

அக்னி நட்சத்திரம்

அக்னி வெயிலில் நடக்கையில்
எனக்கு மட்டும் குளிர்கிறதே …!!

உன்னை பார்க்க வருவதனாலா …??

உயிர்

உயிருடன் ஒப்பிட முடியவில்லை
உன்னை
ஏன் என்றால்
உயிரும் ஒரு நாள்
பிரிந்துவிடும் என்பதால்

மனம் விரும்புதே உன்னை

எப்படி சொல்ல முடியும் 
எல்லாவற்றையும் விட
என் இதயம் விரும்புவது
உன்னை மட்டும் தான் என்று ....!!!

முகவரி

என் அன்புக்கு முகம் தேவை இல்லை.
முகவரியும் தேவை இல்லை.
தொலைவில் இருந்தாலும்,
உன்னை ஒரு துளி கூட மறந்ததில்லை.




தொலைவு

நீ என்னருகில் இல்லை என்பது
எவ்வளவு உண்மையோ ……
அவ்வளவு உண்மை நீ 
எனக்குள் இருக்கிறாய் 

என்பதும்



உயிர்க்க்காக ..

உன், அன்பு
என்னும் மூச்சு காற்றை
நான் சுவாசிக்கேரன்!
எணக்காக, இல்லை 
என், இதயத்தில்
இருக்கும்..!!
உன், 
உயிர்க்க்காக ..!!!



தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!